Leo ட்ரெய்லர் கூட இன்னும் வரலLeo ட்ரெய்லர் கூட இன்னும் வரல

  Leo ட்ரெய்லர் கூட இன்னும் வரல. Leo ட்ரெய்லர் இப்படி தான் இருக்கும். லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதியில் வெளியாக இருக்கின்றது. ட்ரெய்லர் இன்னும் வெளியாக வில்லை. ஆனால் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட முன்பதிவு தொடங்கி உள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் டாலர் வசூல் செய்ய உள்ளது.

ட்ரெய்லர் கூட இன்னும் வரல ! ஆனால் Leo டிக்கெட் புக்கிங்கில் சாதனை  !

Leo ட்ரெய்லர் கூட இன்னும் வரல

லியோவை எதிர்பார்க்கும் ரசிகர்கள் :

   லோகேஷ் இயக்கிய லியோ திரைப்படம் விஜய் , திரிஷா நடிப்பில் வருகின்ற 19ம் தேதியில் திரையங்கில் வெளியாக இருக்கின்றது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்பட இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதற்க்கு பதிலாக லியோ அப்டேட் அடுத்தது வரும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல் திரைப்படத்தின் முக்கிய நடிகர்களின் போஸ்டர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது.  

JOIN WHATSAPPCLICK HERE

லியோ ட்ரெய்லர் வெளியீடு :

   லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கின்றது. பாடல் மற்றும் போஸ்டர்கள் இரண்டும் இணையத்தில் பிரபலமாகி வருகின்றது. அதன் வரிசையில் நாளை லியோ ட்ரெய்லர் இருக்கும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. ட்ரெய்லர் சன் யூடியூப் தளத்தில் வெளியாகும். மேலும் சென்னையில் மட்டும் பிரம்மாண்டமாக பல ரசிகர்கள் முன் வெளியாக இருக்கின்றது. 

வசனகர்த்தா பதிவு  :

   லியோ திரைப்படத்தின் வசனகர்த்தாவாக இருப்பர் தீரஜ் வைத்தி. இவர் லியோ ட்ரெய்லர் வெளியீடு குறித்து X தளத்தில் பதிவிட்ட கருத்து வைரல் ஆகி வருகின்றது.  ” ட்ரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும் ” என்று பதிவிட்டு உள்ளார். ட்ரெய்லர் வருவதை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு இவர் கொடுத்த வசனம் மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

ஜீ தமிழ் தவமாய் தவமிருந்து சீரியல் ! எண்டு கார்டு போட்டாச்சு !

ட்ரெய்லர் எப்படி இருக்கும் :

   2 நிமிடம் 38 நிமிடங்கள் வரையில் லியோ திரைப்பட ட்ரெய்லர் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பேசிய வசனம் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. யூடியூபில் ஒரு நாளில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் 2.5 மில்லியன் லைக்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.    

1  மில்லியன் டாலர் வசூல் கட்டாயம் :

   பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும் லியோ ட்ரெய்லர் இன்னும் வெளியாக வில்லை. ஆனால் அமெரிக்கா , கனடா நாடுகளில் முன்பதிவு குவிந்து வருகின்றது. அமெரிக்காவில் $500K மற்றும் கனடாவில் $250K வசூல் ஆகி உள்ளது. இங்கு திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் டாலருக்கும் மேல் வசூல் செய்ய உள்ளது. 

பாடல் , போஸ்டர் வரிசையில் ட்ரெய்லர் நாளை வெளியாகி மாஸ் காட்ட இருக்கின்றது. இத்திரைப்படதிற்கு விளம்பரம் அதிகமாக இருக்கின்றது. வெற்றி பேராது என்று ஒரு கூட்டம் பேசினாலும் தளபதியின் லியோ கட்டாயம் வெற்றி பெறும் என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.    

By Nivetha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *