லியோ ட்ரைலர் புதிய தகவல்லியோ ட்ரைலர் புதிய தகவல்

    விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் திரைக்கு வர இருக்கின்றது. ஆனால் தற்போது வரையில் வேறு எந்த நடிகர்களின் திரைப்படங்களும் வெளியாகும் என்ற அறிவிப்பு வரவில்லை. திரைப்படம் வெளியீட்டு தேதி நெருங்கி வருகின்றது ஆனால் ட்ரைலர் வெளியாகாமல் இருக்கின்றதே என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் விஜய் நடித்துள்ள லியோ ட்ரைலர் புதிய தகவல் வந்தது முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது.

லியோ ட்ரைலர் புதிய தகவல் வந்தது முக்கிய தகவல்

லியோ ட்ரைலர் புதிய தகவல்

லியோ என்ன கதை :

    லியோ திரைப்படத்தினை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் LCU வடிவில் எடுத்து இருக்கின்றார். கைதி , மாஸ்டர் , விக்ரம் திரைப்படத்தினை தொடர்ந்து லியோ LCU முறையில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சாக்லேட் குடேன் வைத்து இருக்கின்றார். கைதி திரைப்படத்தில் கார்த்தி சாக்லேட் குடோனில் வேலை செய்தார் என்று அவரே சொல்லி இருப்பார். விஜய் நடித்து உள்ள இத்திரைப்படமானது கைதி திரைப்படத்தில் வரும் கதைக்கு முன் நடந்த சம்பவங்கள் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

லியோ இசை வெளியீடு :

    விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் முதல் பாடல் இணையதளத்தில் பெரும் பரபரப்புகளுடன் வெளியாகியது. இதன் இரண்டாவது சிங்கிள் பற்றிய தகவல்கள் இந்த வாரம் இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது வழக்கம் போல் சென்னையில் நடைபெறாமல் மதுரை மாவட்டத்தில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றது. ஆனால் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்

லியோ 2வது சிங்கிள் :

    விஜய் சேதுபதி நடிக்கும் 50வது திரைப்படமான ” மகாராஜா ” திரைப்படத்தின் துவக்க விழாவில் லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் அடுத்த வாரம் முதல் லியோ திரைப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும் என்று கூறினார். மேலும் இரண்டாவது சிங்கிள் பாடல் விநாயகர் சதுர்த்தி 18.09.2023 அன்று திங்கள் கிழமை வெளியாகும் என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறி இருக்கின்றார். ஆனால் லியோ திரைப்பட குழுவில் இருந்து இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

லியோ டிக்கெட் புக்கிங் எப்போது :

     தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஆயிரம் கோடி வசூல் செய்யும் திரைப்படமாக லியோ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் அடுத்த மாதம் 19ம் தேதியில் தமிழ் , தெலுங்கு , ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கின்றது. தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து நூறு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே லண்டன் பகுதிகளில் பத்து ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை செய்து உள்ளது. இதனால் தமிழகத்தில் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். 

லியோ ட்ரைலர் புதிய தகவல்

அக்டோபர் 2 ட்ரைலர் வெளியீடு :

    தற்போது வரையில் இல்லாத அளவிற்கு விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. திரைப்படத்தின் ஒவ்வரு அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. திரைபடக்குழு சார்பில் உறுதியான தகவல் வெளியாகாத நிலையிலும் ரசிகர்கள் மத்தியில் இத்தகவல் வரவேற்பு பெற்றுள்ளது. 

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *