இன்சூரன்ஸ் துறையின் முக்கிய நிறுவனத்தை சேர்ந்த LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை. பாலிசி தொடர்பான எந்த வித முடிவுகளையும் எடுக்கும் போது பாலிசிதாரர்கள் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம். life insurance corporation.
LIC பாலிசி தாரர்களே எச்சரிக்கை
பாலிசிதாரர்கள் பாலிசிகளை LIC நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பதிலாக விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் மற்றும் வேறு வகையில் பெறுவதற்கு முன் வந்துள்ளதாக அறிகிறோம். அத்தகைய நிறுவனங்களுடனோ அல்லது சேவைகளுடனோ எங்களுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை. இதற்கு LIC நிறுவனம் எந்த வித பொறுப்பும் ஏற்காது. பாலிசிகள் விற்பனை, பரிமாற்றம், உரிமை மாற்றம் ஆகியவை காப்பீட்டு சட்டம்(1938) ன் படி மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது சிபிஐ – காலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் நடந்த நடவடிக்கை!
மேற்கண்டவாறு செயல்படும் பரிவர்த்தனைகள் தற்போது அமலில் உள்ள சட்டத்தின் படி, பாலிசிதாரர்கள் நலன் சார்ந்தது அல்ல, பொதுநலனுக்கு உகந்தது அல்ல, பாலிசிகளை வர்த்தகம் செய்யும் நோக்கிலானது ஆகிய காரணங்களுக்காக எங்கள் நிறுவனம் நிராகரிக்கலாம். அதனால் பாலிசிதாரர்கள் இது தொடர்பாக எந்த வித முடிவையும் எடுக்கும் முன்பு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது தொடர்பான முடிவுகள் பாலிசியின் ஆயுள் காப்பீடு மற்றும் நிதி பாதுகாப்பை பாதிக்கலாம்.
எந்த முடிவையும் செயல்படுத்துவதற்கு முன்பு, எங்கள் கிளைகளில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். LIC நிறுவனம் வெளிப்படை தன்மை மற்றும் பாலிஸிதார்களின் நலன்களை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது.
இன்று வந்த முக்கிய செய்திகள் ( Today Breaking News Update )
தமிழ்நாட்டில் வெளிமாநில பேருந்துகளை அனுமதிக்க வேண்டும்
நாமக்கல்லில் 11 வயது மாணவி மயங்கி உயிரிழப்பு
தவெக தலைவர் விஜய் ஊக்கத்தொகை வழங்கும் விழா
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை – மத்திய அரசு