தற்போது சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை :
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக எஸ்.பி.மாதவி (வயது 50) நியமிக்கப்பட்டார். அந்த வகையில் டபேதார் பணி என்பது மாநகராட்சி மேயர் வருவதை பொதுமக்களுக்குத் அறிவுறுத்தும் விதமாக மேயர் முன்பு நடந்து செல்வார்கள்.
அத்துடன் வழிவிடும்படி ஒலி எழுப்பிக் கொண்டே செல்வார்கள். மேலும் பெண் டபேதார் மாதவி மாநகராட்சி மேயர் பிரியா உடன் அரசு விழாக்களில் பங்கேற்பார்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி, தற்போது மணலி பகுதிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த வகையில் அவர் மீது உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது போன்ற காரணங்களினால் தற்போது இவர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டபேதார் மாதவி பதில் :
அந்த வகையில் டபேதார் மாதவிக்கு கொடுக்கப்பட்ட மெமோவுக்கு, அவர் அளித்துள்ள பதில் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் 6 அன்று மேயரின் தனிப்பட்ட உதவியாளர் சங்கருக்கு எழுதிய பதில் கடிதத்தில் அவர் குறிப்பிட்டது லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று சொன்னீர்கள் என்றும் நான் உங்கள் உத்தரவை மீறி அதைப் பயன்படுத்தினேன்.
மேலும் இது குற்றமாக இருந்தால் நான் உதட்டுச்சாயம் அணிவதைத் தடை செய்யும் அரசாங்க உத்தரவை காட்டுங்கள் என்று மாதவி பதிலளித்துள்ளார்.
விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா? அவரே சொன்ன சூப்பர் தகவல்!!
மேயர் பிரியா விளக்கம் :
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில் இந்த இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் அணிந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், மகளிர் தினத்தின் போது பேஷன் ஷோ ஒன்றில் டபேதார் பங்கேற்றது விமர்சனத்துக்குள்ளானது என்றும்,
மேலும் இதுகுறித்து அவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் மேட் லிப்ஸ்டிக் அணிந்திருந்தார். அந்த வகையில் இதுபோன்ற ஷேடுகளில் லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்று தன் பி.ஏ கூறினார் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.