நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள். தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவைக்கான தேர்தலில் 797 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

அந்த வகையில் இதில் 73 பேர் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றம் செல்ல உள்ளனர். அதிகபட்சமாக பாஜக சார்பில் 30 பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வது மக்களவைத் தேர்தலில் 78 பெண் எம்.பி கள் மக்களவைக்கு தேர்வாகியிருந்த நிலையில்,

தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் 73 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். அந்த வகையில் மத்தியஅரசு நிறைவேற்றிய பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா எப்போது செயல்பாட்டு வரும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதனையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செப்டம்பர் 21, 2023 அன்று பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது.

அதன் பின்னர் இந்த மசோதா இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 797 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதிகபட்சமாக 69 பெண் வேட்பாளர்கள், காங்கிரஸ் கட்சி சார்பில் 41 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தியது.

தமிழகத்தின் நாம் தமிழர் கட்சி அதன் வேட்பாளர்களில் 50% பெண்களுக்கு வழங்கியது. மேலும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 40% பெண் வேட்பாளர்களைக் கொண்டிருந்தன.

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

அத்துடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் பிஜு ஜனதா தளம் தலா 33% பெண்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 29%,

சமாஜ்வாதி கட்சி 20% மற்றும் திரிணமூல் காங்கிரஸ் 25% பெண் வேட்பாளர்களை தேர்தல் களத்தில் இறக்கினர்.

இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்த முறை பாஜக சார்பில் 30 பெண்களும்,

காங்கிரஸ் கட்சியிலிருந்து 14 பெண்களும், திரிணமூல் காங்கிரஸிலிருந்து 11 பெண்களும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 4 பெண்களும்,

திமுக சார்பில் 3 பெண்களும், ஜேடியு சார்பில் 2 பெண்களும், எல்ஜேபி (ஆர்) சார்பில் 2 பெண்களும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *