கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. நவம்பர் 1 தமிழ்நாட்டுடன் இணைந்த தினம் என்பதால் மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருக்கின்றார். 66 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தினத்தில் என்ன நடந்தது, முதல்வர் காமராஜர் தலைமையில் தமிழ்நாட்டுடன் இணைந்த கன்னியாகுமரி.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
சாதி பாகுபாடுகள் கொண்ட சமஸ்தானம் :
கன்னியாகுமரி மாவட்டம் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமாதானத்தின் கீழ் இருந்தது. அப்போது இருந்த மக்கள் சமஸ்தானத்தில் பல கொடுமைகளை அனுபவித்து உள்ளனர். சாதி பாகுபாடுகள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது திருவாங்கூர். இந்த சமஸ்தானத்தின் கீழ் இருக்கும் 13 தாலுக்காக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பலர் தங்களின் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
66 ஆண்டுகள் நிறைவு :
இறுதியில் 1956ல் அப்போதைய முதல்வர் காமராஜர் தலைமையில் நவம்பர் 1ம் தேதி 13 தாலுக்காக்களை இணைத்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. பல போராட்டங்கள் உயிரிழப்புகளை கடந்து கன்னியாகுமரி மாவட்டம் தாய் நாடான தமிழகத்துடன் இணைத்து 66 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் எல்லைப்பகுதியாக இருக்கின்றது.
பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய ஆஸ்திரேலியா ! சற்று முன் 367 ரன்கள் குவிப்பு !
நவம்பர் 1 – உள்ளூர் விடுமுறை :
மக்களின் நலன் காக்க தங்களின் உயிர்களை துறந்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் நவம்பர் மாதம் 1ம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அவர்களால் உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டு உள்ளது.
வளம் நிறைந்த கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த தினம் என்பதால் உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டு உள்ளது.