சமையல் எரிவாயு 500 குறைப்பு.., பெட்ரோல் விலை ரூ.75.., மாணவர்கள் கடன் ரத்து., திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை இதோ!!

மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் மக்களிடம் ஓட்டு கேட்க இப்பொழுது இருந்தே கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கட்சி எடப்பாடி பழனிச்சாமி முதல் கட்ட வேட்பாளர்கள்  பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது முதல்வர் முக ஸ்டாலின் தேர்தல் அறிக்கை மற்றும்  வேட்பாளர்கள்  பட்டியலை வெளியிட்டார்.

  • திருக்குறள் தேசிய மொழியாக அறிவிக்கப்படும்
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கட்டாயம் வழங்கப்படும்
  • ஒரே நாடு ஒரே தேர்தல் கைவிடப்படும்
  • மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் 4 லட்சம் வழங்கப்படும்.
  • இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
  • ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
  • ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
  • சென்னையில் 3வது ரயில் முனையம் அமைக்கப்படும்
  • பாஜகவால் அமலுக்கு வந்த புதிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும்.
  • மத்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
  • நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 % சலுகை அமலுக்கு கொண்டு வரப்படும்.
  • நாடு முழுவதும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
  • 400 ரூபாய் ஊதியத்தில் 100 நாள் வேலை நாட்கள் 150 நாட்களாக உயர்த்தப்படும்
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது
  • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்
  • நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
  • நீட் தேர்வு ரத்து செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்
  • பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்
  • நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.
  1. வடசென்னை- கலாநிதி வீராசாமி
  2. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
  3. தென் சென்னை -தமிழச்சி தங்கப்பாண்டியன்
  4. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி
  5. ஸ்ரீ பெரும்புதூர் – டி.ஆர்.பாலு
  6. நீலகிரி – ஆ.ராசா
  7. திருவண்ணாமலை – அண்ணாதுரை
  8. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
  9. கோவை –  கணபதி ராஜ்குமார்
  10. காஞ்சிபுரம் – செல்வம்
  11. ஈரோடு – பிரகாஷ்
  12. ஆரணி  – எம்.எஸ். தரணிவேந்தன்
  13. வேலூர் – கதிர் ஆனந்த்
  14. பொள்ளாச்சி – சண்முகசுந்தரம்
  15. தூத்துக்குடி -கனிமொழி
  16. பெரம்பலூர் – அருண் நேரு
  17. தேனி – தங்க தமிழ்ச்செல்வன்
  18. தஞ்சாவூர் -பழனிமாணிக்கம்
  19. தர்மபுரி – மணி
  20. தென்காசி – ராணி

அனல் பறக்கும் அரசியல் களம்.., வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி.., மதுரையில் யார் போட்டியாளர் தெரியுமா?

Leave a Comment