
நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை கடந்த சில நாட்களாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அதை அரசு கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து அதை பெற்று செல்லலாம் என தெரிவித்துள்ளது. சமீபத்தில் இதே போன்று 18 கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.