
கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு. தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை பெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது
கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் தேர்வு :
தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 மக்களவை உறுப்பினர்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 27 பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்றும் தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய பகுப்பாய்வில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதே போல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 233 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தன.
நரேந்திர மோடி ஜூன் 9ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு… ஏற்பாடுகள் தீவிரம்!!
அந்த வகையில் 2014ஆம் ஆண்டில் 185 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது மக்களவையில் கிரிமினல் வழக்குகளை கொண்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது