தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம் ! சவால் விட்ட ஓபிஎஸ் – தேர்தல் ஆணையத்தில் புதிய மனு !

தனித்தனி சின்னத்தில் போட்டி போடுவோம். அதிமுக கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி போன்றவற்றை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தக்கூடாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் அதிமுகவின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் நிரந்தரமாக பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியது.

இதனால் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் புதிதாக மனுதாக்கல் செய்துள்ளார். அதன்படி வரும் மக்களவை தேர்தலில் தன்னை அதிமுக வேட்பாளராக அங்கீகரித்து வேட்புமனுவில் கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்க வேண்டும் எனவும்,

இபிஎஸ்க்கு அடித்த ஜாக்பாட் ! ஓபிஎஸ் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது – நிரந்தர தடைவிதித்த சென்னை ஐகோர்ட் !

அதன்படி சின்னம் கிடைக்காத பட்சத்தில் அதிமுகவை இரு அணிகளாக பிரித்து தனித்தனி சின்னங்களை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment