ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை. இந்தியாவில் நாடளுமன்றதேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணியும், தேசிய கட்சியான பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை :
தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில் அனைத்து கட்சி முக்கிய தலைவர்களும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அரசியல் காமெடியன் அண்ணாமலை ! விமர்சனம் செய்த விசிக தலைவர் திருமாவளவன் – பாஜகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தேர்தல் பரப்புரை !
இந்நிலையில் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கு பாஜகவின் முக்கிய தலைவரும் உள்துறை அமைச்சரான அமித்ஷா ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வரஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் வரவுள்ள அமித்ஷா பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.