வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் எறக்குறைய தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர்.
இந்த அடிப்படையில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் MP மனுதாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் MP தற்போது அந்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நேற்று வேட்புமனுத்தாக்கல் இன்று வாபஸ் :
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த வகையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் MP ராமசுப்பு மனுதாக்கல் செய்திருந்தார். அத்துடன் தான் சுயேட்சையாக போட்டியிடவில்லை எனவும் நான் தான் உண்மையான காங்கிரஸ்காரன் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பேருந்தில் முதல் பெண் கண்டக்டர்?.., யார் இவர்?.., எப்படி இந்த பெருமையை அடைந்தார் தெரியுமா?
இந்நிலையில் முன்னாள் MP ராமசுப்பு தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு எதிராக நானே ஒருபோதும் செயல்படமாட்டேன் மேலும் என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு வேட்புமனுத்தாக்கல் செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.