பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார்.

வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இது என்னடா ஓபிஎஸ்க்கு வந்த சோதனை.., ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.., குழப்பத்தில் ராமநாதபுரம் வாக்காளர்கள்!!

அவ்வாறு இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் பட்சத்தில் தனக்கு பக்கெட் சின்னத்தை ஒதுக்குமாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment