தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் - இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் - இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !

தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளனர். அந்த வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற முதற்கட்ட தேர்தல் பணிகளை நிறைவு செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதன் படி கட்சிகளின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வரும் மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகள் வழங்கும் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அங்கீரிக்கப்பட்ட கட்சிகள் அதிகபட்சமாக 40 நட்சத்திர பேச்சாளர்கள் வரை நியமித்துக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுக கூட்டணி சார்பில் முதல்வர் ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் திருச்சி சிவா போன்ற முக்கிய தலைவர்களின் பெயர்களைக்கொண்ட பட்டியலை திமுக சமர்ப்பித்துள்ளது.

ஏப்ரல் 4 ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வருகை ! மதுரை, சிவகங்கை மற்றும் சென்னை தொகுதியில் பிரச்சாரம் – அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பாஜக தலைமை !

பாஜக கூட்டணி சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஓபிஎஸ், டிடிவி.தினகரன், ராமதாஸ், அன்புமணி போன்றவர்களின் பெயர்களை பாஜக பரிந்துரை செய்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் 29 கட்சிகளில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *