அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடை நிறைவு செய்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனு தாக்கல் மற்றும் தீவிர தேர்தல் பிரச்சாரம் என மக்களவை தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அதிமுக வேட்பாளரிடம் 648 கோடி சொத்து :
அதிமுக சார்பில் ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஆற்றல் அசோக் குமார் தன் பெயரிலும் தன்னுடைய மனைவி பெயரிலும் மொத்தம் 648 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அசோக்குமார் பெயரில் 526 கோடிக்கு அசையும் சொத்து மற்றும் 57 கோடிக்கு அசையா சொத்து அவரது மனைவி கருணாம்பிகா பெயரில் 47 கோடிக்கு அசையும் சொத்து, 22 கோடிக்கு அசையா சொத்து உள்ளது என பிரமானபத்திரத்தில் குறிப்பிடப்பட்டுளளது.
ஸ்டாலினை பார்த்ததும் கதறி அழுத மூதாட்டி.., உடனே முதல்வர் செய்த காரியம்.., தூத்துக்குடியில் பரபரப்பு!!
மேலும் ஆற்றல் அசோக்குமார் பாஜக MLA சரஸ்வதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.