மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை - கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை - கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு !

மத்தியில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக இந்தியா கூட்டணி ஆலோசனை. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியில் யார் ஆட்சியமைக்கப்போவது என்பது குறித்து அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவில் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு – பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

இதையடுத்து நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக நாளை நடைபெறும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *