Home » செய்திகள் » கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு – பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு – பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு - பாஜகவிற்கு பேரிடியாக அமைந்த வாக்கு எண்ணிக்கை !

கருத்துக்கணிப்புகளை அடித்து நொறுக்கிய மக்கள் தீர்ப்பு. தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக 295 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது.

தேர்தலுக்கு பிறகு வெளிவந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்னும் சில ஊடகங்கள் 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் என கூறப்பட்டு வந்த நிலையில்,

மக்களவை தேர்தலில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சிகள் – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு !

தற்போது நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி 295 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெரும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை இடங்களை எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற கனவில் இருந்த பாஜகவிற்கு இந்த வாக்கு எண்ணிக்கை பேரிடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top