நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக ஓட்டுகள் பெற்ற கட்சிகளின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சேர்த்து மொத்தம் 2 கோடியே 6 ஆயிரத்து 693 வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த கூட்டணியானது தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளுடன் சேர்த்து 1 கோடியே 55 ஆயிரத்து 124 வாக்குகளை பெற்றுள்ளனர்.

இதனை போன்று பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 79 லட்சத்து 44 ஆயிரத்து 700 வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளின் எண்ணிக்கையில் 3 வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி ! முக்கிய இலாக்காக்கள் யாருக்கு? – கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை !

இதனையடுத்து கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 35 லட்சத்து 60 ஆயிரத்து 485 வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சிக்கான அந்தஸ்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *