2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இனி பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.., தமிழக அரசு அதிரடி உத்தரவு!!2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இனி பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.., தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

2024 லோக்சபா தேர்தல்

லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு கொண்டு வந்தன. அதன்படி உரிய ஆவணம் இல்லாமல் வாகனங்களில் பணம், பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வருபவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் என பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மூளை முடுக்கிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு பேருந்துகளில் பார்சல்களை கொண்டு செல்ல தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்த நிலையில், பஸ் கண்டக்டரிடம் கட்டணம் செலுத்தி, பார்சல்களை அனுப்பும் நடைமுறை தான் தற்போது செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பேருந்தில் ஆட்களே இல்லை என்றாலும் பார்சல் கொண்டு செல்லும் பழக்கமும் இருந்து வருகிறது. எனவே இன்று முதல் அரசு பேருந்துகளில் ஆட்கள் இல்லாமல் பார்சல்களை அனுப்ப கூடாது என்று டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதினா ஓகே.., ஆனா தாமரை சின்னம் தான்.., ஓபிஎஸ்க்கு செக் வைத்த பாஜக., அதை ஏற்பாரா OPS?

மேலும் பேருந்தில் செல்லும் மக்கள் ரூ 50 ஆயிரம் வரை கொண்டு செல்லாமல். வழியில்  பறக்கும் படையினர் தடுத்தார்கள் என்றால் உரிய காரணம் சொல்ல வேண்டும். மேலும் ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் கையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் உங்களுடைய பணம்  பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். அதுமட்டுமின்றி 10 லட்சத்திற்கு மேல் இருந்தால் வருமான வரி துறைக்கு தகவல் கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *