தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை - முழு தகவல் இதோ !தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை - முழு தகவல் இதோ !

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள், துணை ராணுவப்படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஆவணமின்றி எடுத்துச்செல்லக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் அந்த வேனில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் வேனில் எடுத்து செல்லப்பட்ட 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி நகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டது.

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக – குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

இது குறித்து வேனில் பயணம் செய்த நபர்களிடம் விசாரித்தபோது 3 நகைக்கடைகளுக்கு எடுத்து செல்வதாக கூறினார். மேலும் எடுத்து செல்லப்பட்ட நகைகளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் தேர்தல் பறக்கும் படையினர் தங்க மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *