
மக்களவை தேர்தல் எதிரொலி
மக்களவை தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ஏழு கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் அருகே ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து தீவிரமாக சோதனை செய்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

அப்போது லாரியில் இருந்த 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடிகள், தொப்பிகளுக்கான உரிய ஆவணம் இல்லாததால் அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காக இந்த பொருட்கள் கொண்டு வரப்பட்டது என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.