அடக்கடவுளே.., லொள்ளு சபா நடிகர் சேசு காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!அடக்கடவுளே.., லொள்ளு சபா நடிகர் சேசு காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

லொள்ளு சபா நடிகர் சேசு

விஜய் டிவி தொலைக்காட்சியில் பேமஸ் ஷோவான “லொள்ளு சபா” என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் நடிகர் சேசு (வயது 60). அந்த ஷோவின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சொல்லப்போனால் அதிகமாக சந்தானம் படத்தில் தான் நடித்திருந்தார். ஏன் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.

இப்படி இருக்கையில் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் 10 நாட்கள் வைத்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சேசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். தற்போது அவர் உயிரிழந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

பெண் குழந்தைகளுக்கான சூப்பர் அறிவிப்பு., ரூ.121 இருந்தால் போதும்  27 லட்சம் வாங்கலாம்.., அசத்தல் திட்டம் வெளியீடு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *