பூ பூக்கும் காதல் வாரம் ஆரம்பம்.., புது காதலர்களே இது ரொம்ப கட்டாயம்.., தெரிஞ்சு வச்சுக்கோங்க!!பூ பூக்கும் காதல் வாரம் ஆரம்பம்.., புது காதலர்களே இது ரொம்ப கட்டாயம்.., தெரிஞ்சு வச்சுக்கோங்க!!

பிப்ரவரி மாதம் என்றாலே நம் எல்லோருக்கும் முதலில் நியாபகம் வருவது காதலர் தினம் தான். அந்த இனிமையான நாளில் காதலன் காதலி இணைவதும் அன்பை ஒருவொருக்கொருவர் பகிர்வது வழக்கம். வெள்ளைக்காரன் விட்டு சென்ற இந்த காதல், தற்போது புழு பூச்சிக்கு கூட இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இந்த நாளை உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காதலன், காதலிகள் தங்களது அன்பை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட ஏழு நாட்கள், அதாவது  பிப்ரவரி 7ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை காதல் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி அந்த ஏழு நாட்களில் என்ன விசேஷம் இருக்கிறது என்று தெரியுமா? அது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க,

பிப்ரவரி 7 – ரோஜா தினம் (Rose Day)

புது காதலர்களாக வருபவர்களை ரோஜா போன்ற மலரை கொடுத்து வரவேற்பதற்காக தான் “Rose Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 8 – காதலை வெளிப்படுத்தும் தினம்(Propose Day)

இந்த தினத்தில் தான் தங்களது காதலன் மற்றும் காதலி மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக “Propose Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 9 – சாக்லேட் தினம் (Chocolate Day)

இந்த தினத்தில் தான் புதிய காதலர்கள் முதல் பழைய காதலர்கள் வரை அவர்களின் காதல் தித்திக்கும் வரை அன்பை வெளிப்படுத்துவதற்காக “Chocolate Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 10 – டெடி தினம் (Teddy Day)

காதலன் மற்றும் காதலிகள் ஒருவொருக்கொருவர் எவ்வளவு அரவணைப்புடனும், பாசத்துடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக தான் “Teddy Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 11 – உறுதியளிக்கும் தினம் (Promise Day)

காதலன் மற்றும் காதலிகள் இந்த நாள் மட்டுமின்றி இனி வரும் காலங்களிலும் அனைத்து விருப்பு வெறுப்புகளை ஏற்று கொண்டு இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்று காதலர்கள் வாக்குறுதி அளிக்கும் நாளை தான் “Promise Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 12 – கட்டிப்பிடிக்கும் தினம் (Hug Day)

இந்த நாளில் காதலன் மற்றும் காதலிகள் ஒருவருக்கொருவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக “Hug Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 13 – முத்தம் தினம் (Kiss Day)

பரிசு பொருட்களை தாண்டி காதலர்கள் தங்கள் பாசத்தின் எல்லையை முதல் முத்தம் உணர்த்தும் விதமாக “Kiss Day” கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 14 – காதலர் தினம் (Valentine’s Day)

மேற்கண்ட அனைத்து நாட்களில் காதலர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு புரிந்து கொண்டார் என்பதை எளிமையாக உணர்ந்து கொண்டு, இருவரும் வாழ்க்கை பயணத்தை தொடங்க முதல் படிக்கட்டாக இருக்கும் இந்த நாளை தான் “Valentine’s Day” கொண்டாடப்படுகிறது.

கூடவே இருந்து குழிபறித்த நபர்..,, பிக்பாஸ் பிரபலத்துக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை.. போலீஸ் அதிரடி கைது!!

எனவே இந்த வருடம் பூ பூக்க போகும் காதலர்களுக்கு SKSpread நிறுவனம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *