LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை... எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை... எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை: தற்போதைய காலகட்டத்தில் மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களில் ஒன்றாக சமையல் எரிவாயு இருந்து வருகிறது. இந்த வீட்டு சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டரின் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தான் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட வர்த்தக சிலிண்டர் விலை சென்னையில்  குறைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய விலை பட்டியல் வெளியாகியுள்ளது.

அதாவது சென்னையில் வெ வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகப்படும் 19 கிலோ சமையல் எரிவாயு விலையை ரூ  70.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஜூன் 1 முதல் ஒரு சிலிண்டர்  1,840.50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மும்பையில் ரூ. 69.5 , டெல்லியில் ரூ. 69.5 மற்றும் கொல்கத்தாவில் ரூ. 72 என சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலேயே சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதால் மக்கள் சந்தோஷமாக இருந்து வருகின்றனர். LPG cylinder price update: அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை – cylinder price today – LPG cylinder news – tamilnadu news – chennai news

மத்திய பிரதேசத்தில் அப்பா அண்ணனை கொலை செய்த 15 வயது சிறுமி – காதலனால் வந்த வினை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *