தற்போது மு.க. அழகிரியின் மகன் வேலூர் சிஎம்சியில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ், 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர் சிஎம்சியில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
துரை தயாநிதி :
முன்னாள் மத்திய அமைச்சரும், முதல்வர் மு.க ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. மேலும் இவர் தொழில் அதிபராகவும், பட தயாரிப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் துரை தயாநிதிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையிலுள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதை கண்டு பிடித்து அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி துரை தயாநிதி அனுமதிக்கப்பட்டார்.
துரை தயாநிதி டிஸ்சார்ஜ் :
அந்த வகையில் துரை தயாநிதியின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு !
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.