Breaking News: மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு: இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் இளைஞர்கள் சோசியல் மீடியாவில் பிரபலமாக வேண்டும் என்று தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். இன்னும் கொஞ்சம் சொல்ல போனால் ரீல்ஸ் மோகத்தால் சில உயிரையும் கூட விடுகின்றனர். அவ்வகையில் தற்போது ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் ரீல்ஸ் எடுத்த மாணவன் உயிரிழப்பு
அதாவது மத்திய பிரதேசத்தில் 7ம் வகுப்பு படித்து வந்தவர் தான் கரண். இவர் படிப்பையும் தாண்டி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதை ஒரு பொழுது போக்காக வைத்துள்ளார். instagram video download
அதற்கு அந்த சிறுவனின் பெற்றோரும் உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தான் அந்த சிறுவன் ஒரு படத்தின் காட்சியை RE Creat செய்துள்ளார். school student
அப்போது அவரது கழுத்தில் கயிறு இறுக்குவது போல் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அந்த சிறுவன் உண்மையாக கழுத்தில் கயிறு இறுக்கி அவர் மயங்கி விழுந்துள்ளான்.
அப்போதும் கூட சிறுவனின் பெற்றோர் தனது மகன் நடித்து கொண்டிருக்கிறான் என்று நினைத்த போதிலும், அந்த சிறுவன் எழாமல் இருந்து வந்துள்ளான்.
Also Read: தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்? டெல்லி தலைமை அவசர ஆலோசனை!
இதனால் பதறிப்போன பெற்றோர் கரணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் ஒரு இன்ஸ்டா செலிபிரிட்டி மலையில் இருந்து 300 அடி கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Madhya Pradesh
RSS அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம்
கர்நாடகாவில் 25 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (23.07.2024)