தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக மக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீரியம் எடுக்கும் மெட்ராஸ் ஐ
இப்படி இருக்க தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக மெட்ராஸ் ஐ எனப்படும் கண் தொற்று நோய் பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு தான் அதிக அளவில் ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவர் இளங்கோவேள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மெட்ராஸ் ஐ சாதாரண குணப்படுத்தக்கூடிய தொற்று நோய் என்றாலும் கூட அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படி உரிய சிகிச்சை எடுக்கவில்லை என்றால் பார்வையில் தெளிவற்ற நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர்? நிர்வாகம் அதிரடி முடிவு!
மெட்ராஸ் ஐ அறிகுறிகளான கண்ணில் நீர் சுரத்தல், கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்திருத்தல் போன்றவைகள் உடனடியாக தென்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு