லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அத்துடன் நீதிபதியை BOSS என்று அழைக்கக்கூடாது என்றும் அறிவுரை.
நடிகர் விஷாலை கண்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நடிகர் விஷால் :
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடரப்பட்ட இந்த வழக்கில் விஷால் நேரடியாக ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.
விஷாலை கண்டித்த நீதிபதி :
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்பு செழியனிடம் விஷால் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை லைக்கா நிறுவனம் செலுத்தியுள்ளது.
அந்த வகையில் அந்த கடனை திருப்பி செலுத்தும் வரை விஷால் நிறுவனத்தின் அணைத்து படங்களின் உரிமைகளும் லைக்கா நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தம் மீறப்பட்டதாக லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் குறுக்கு விசாரணைக்காக விஷால் நேரில் ஆஜரானார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் – பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிப்பு !
இதனையடுத்து விசாரணையின் போது நீதிபதியை விஷால் BOSS என்று அழைத்துள்ளார். இதனை கண்டித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, நீதிபதியை BOSS என்று அழைக்கக்கூடாது என்றும் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என்று சரியாக பதில் சொல்ல வேண்டும் என்று நீதிபதி கண்டித்துள்ளார்.
மேலும் இந்த குறுக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்துவிட்டு நடிகர் விஷால் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.