தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில் இந்த காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். Tamil Nadu Electricity Board
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36000 காலிப்பணியிடங்கள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மின்சார வாரிய காலிப்பணியிடங்கள் :
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு மின் வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பில் நாளை (22.08.2024) வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளது எனவும்,
அந்த வகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும். விழாக் காலங்கள் நெருங்கி வரும் இந்நிலையில் வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர் என மனுவில் தெரித்திருந்தார். madras High Court orders
நீதிபதிகள் விசாரணை :
இதனையடுத்து இந்த வழக்கானது உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (21.08.2024) விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) தெரிவிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 36 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது. TANGEDCO fill 36000 gangman vacancies
தமிழக அரசாங்கத்தில் வேலை வாய்ப்பு – 861 காலி பணி இடங்கள் – தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!
வழக்கு ஒத்திவைப்பு :
இதனை தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்த தொழிற்சங்கம் சார்பில் இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறோம் எனத் தெரிவித்தது.
மேலும் இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒப்பந்தம் முறையிலோ அல்லது தற்காலிகமாகவோ காலி பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தி இந்த வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.