MHC Jobs: சென்னை உயர்நீதிமன்றத்தில் Chobdar, Office Assistant, Residential Assistant, Room Boy, போன்ற வேலை 2025க்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பு எண் (72 / 2025) ஏப்ரல் 6, 2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மே 5, 2025 வரை வரவேற்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ வலைத்தளமான https://www.mhc.tn.gov.in மூலம் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரங்கள்:
வேலை | காலியிடங்கள் | சம்பளம் |
Chobdar | 12 | Rs. 15,700 – 58,100 |
Office Assistant | 137 | Rs. 15,700 – 58,100 |
Residential Assistant | 87 | Rs. 15,700 – 58,100 |
Room Boy | 4 | Rs. 15,700 – 58,100 |
கல்வித்தகுதி
8ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதிகபட்சமாக 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதியில், உயர்நிலைப் பள்ளி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியைத் தவிர வேறு எந்த உயர் தகுதியையும் பெற்றிருக்கவில்லை / தொடரவில்லை என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் (Office Assistant) பதவிக்கு, செல்லுபடியாகும் LMV ஓட்டுநர் உரிமம், சமையலில் அனுபவம், வீட்டு பராமரிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தேர்வு கட்டணம்
BC; BCM; MBC&DC; Others/UR | Rs.500/- |
SC, SC(A) & ST | இலவசமாக விண்ணப்பிக்கலாம். |
Persons with benchmark disabilities | இலவசமாக விண்ணப்பிக்கலாம். |
குறிப்பு: கட்டணங்கள் விண்ணப்பதாரர்களுக்குத் திரும்பப் பெறப்படாது. மே6, 2025 க்குள் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை 2025 விண்ணப்பதாரர்கள் தேர்வு முறை மூன்று நிலைகளை கொண்டுள்ளது.
- பொது எழுத்துத் தேர்வு
- திறன் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
எப்படி விண்ணப்பிப்பது
அதிகாரபூர்வ வலைதள https://www.mhc.tn.gov.in பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
உங்கள் அடிப்படை சுய விவரங்களை ஆட்சேர்ப்பு போர்ட்டலில் உள்ளிட்ட வேண்டும்.
Desktop அல்லது Laptop பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும். மொபைல் போன் பயன் படுத்த வேண்டாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அல்லது தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும்.
பின்னர் தேர்வு கட்டணத்தை அதற்கான காலக்கெடு தேதி முடிவதற்குள் செலுத்தவும்.
விண்ணப்பத்தை இறுதி தேதி முடிவதற்குள் சமர்ப்பித்து, அதன் நகலை வைத்திருக்கவும். தேர்வு நேரத்தில் கேட்கப்படலாம்.
முக்கிய தேதிகள்
அறிவிப்பு வெளியான நாள் | 6 ஏப்ரல் 2025 |
ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம் | 6 ஏப்ரல் 2025 |
பதிவு மற்றும் சமர்ப்பிக்க கடைசி தேதி | 5 மே 2025 |
கட்டணம் செலுத்த கடைசி தேதி | 6 மே 2025 |
பணியமர்த்தப்படும் இடம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலோ அல்லது மதுரையிலோ அல்லது தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியிலோ அல்லது கோயம்புத்தூர் அல்லது மதுரையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமியிலோ முதன்மைப் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும், நிர்வாகத் தேவைகள் மற்றும் தேவைகளைப் பொறுத்து, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், எந்த நேரத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுவார்கள்.
Madras High Court Recruitment 2025 240 Various பணியிடங்கள் பற்றி தகவல் பெற எங்கள் SKSPREAD இணையதளத்தை பின்தொடருங்கள்