JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த போராட்டம். சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டமானது இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமாக இருக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டமானது 2017ம் ஆண்டு முதல் அளிக்கப்படாமல் உள்ள உரிய மானிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
பயணிகளே.., அடுத்த 2 நாட்களுக்கு 1,130 கூடுதல் பஸ்கள் இயக்கம்.., எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? முழு விவரம் உள்ளே!!
மாணவர்கள் பாதிப்பு :
மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பேராசிரியர்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் ஒரு பிரிவு மாணவர்கள் இறங்கி உள்ளனர்.