மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஆதினம் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மதுரை திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள கோவிலும் ஒன்று. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. மலை மீது ஏறி சென்று மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்திற்கு மதுரை ஆதினம் செல்ல போலீஸ் தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி, அந்த மலையில் ஒரு தர்காவும், அதன் மறுபுறத்தில் பழங்கால சமணர் குகை ஒன்றும் அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த தர்காவில், இஸ்லாமிய அமைப்பினர் ஆடு, கோழி பலியிடுவோம் என்று கூறி மலைக்கு கிளம்பிய நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில், சமணர் குகையில் பச்சை பெயிண்ட் சில மர்ம நபர்கள் அடித்த நிலையில், அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
திருப்பரங்குன்றத்தில் சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்.., வெடித்த மத பிரச்சினை!
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்ல மதுரை ஆதினம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், காவல்துறை கோவிலுக்கு செல்ல ஆதினத்துக்கு தடை விதித்துள்ளனர். மேலும் இங்கு வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற கூடாது என்பதற்காக, போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் அதிர்ச்சி வீடியோ.., ஆடியோவில் ஒலித்த பெயர்!!
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
குழந்தையுடன் பாதாள குழியில் விழுந்த பெண்.., செல்போனால் ஏற்பட்ட விபரீதம்!!
தமிழகத்தில் வீரியமெடுக்கும் உண்ணி காய்ச்சல்.., உயிரிழப்புக்கும் வாய்ப்பு.., மக்களே உஷாரா இருங்க!!