மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கிராம பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதற்காக எய்ம்ஸ் நிர்வாகம் ரூ.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள்
அத்துடன் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து, ஜெய்க்கா நிதி நிறுவனத்திடம் கடன் பெற்ற நிலையில் 2023 ஆகஸ்ட் 17 மருத்துவமனை கட்டுமான பணிக்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சில கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான நிபந்தனைகள் :
மருத்துவ கழிவுப்பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
கழிவுநீரை சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத வகையில் ஜீரோ வேஸ்டேஜ் முறையில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.
மருத்துவமனை வளாகத்தில் வீணாகும் இயற்கை கழிவுகளை பயோ-காஸ் முறையின் அடிப்படையில் எரிபொருளாக மாற்றி மருத்துவமனை கேண்டீன் மற்றும் சமையலறைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாலிதீன் பொருட்களை மருத்துவமனை வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.
வாகனங்களின் பார்க்கிங் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்க வசதிகள் செய்ய வேண்டும்.
மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு மற்றும் நச்சுக்களை வாரம் ஒரு முறை காற்று மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி தரத்தை கண்காணிக்க வேண்டும்.
மேலும் வளிமண்டலத்திலிருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் யூனிட்டை ஏற்படுத்தி ஆக்சிஜனை சொந்தமாக தயாரித்துக்கொள்ள வேண்டும்.
கனடாவில் சூப்பர் விசா திட்டம் அறிமுகம் ! பெற்றோர்கள் 5 ஆண்டுகள் அந்நாட்டில் தங்க அனுமதி !
சிவகாசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வெடி விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் உயர் தீக்காய சிகிச்சை பிரிவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.