தற்போது மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. Madurai Airport to function 24 hours from tomorrow
மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரம் செயல்படும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மதுரை விமான நிலையம் :
மதுரை விமான நிலையம் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் தற்போது காலை 6.55 மணி முதல் இரவு 9.25 மணி வரை மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மதுரைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என விமான நிலைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரவு நேரத்தில் உள்நாடு மறும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்க தனியார் நிறுவனங்களுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாற்றங்கள் :
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டும் என, தென் மாவட்ட மக்களின் தொடர் கோரிக்கையாக இருந்து வந்தது. Airports Authority of India approves
அந்த வகையில் சர்வதேச முனையமாக அறிவிக்க வேண்டுமெனில் விமான நிலயமானது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் அதற்க்கு பணிபுரியும் வகையில் பணியாளர்களும் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.
திருப்பதி லட்டு விவகாரம் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் – ஆந்திர அரசுக்கு சரமாரி கேள்வி !
இதன் அடிப்படையில் தற்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விமான நிலைய ஊழியர்கள், சுங்க இலாகாவினர் மற்றும் குடியுரிமை அதிகாரிகள் உள்ளிட்டோர் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.