ஜூலை 13 ம் தேதி மதுரை அழகர்கோவில் ஆடி 2024 கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தூங்கா நகரத்தில் கோவில் திருவிழா என்றாலே ஊரே கலை கட்டும். அதுவும் கள்ளழகர் சித்திரை திருவிழான்னா 15 லட்சம் பேர் வைகை ஆற்றில் கூடுவது உறுதி. அப்பேற்பட்ட அழகர் கோவிலில் ஆடி திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். அதற்கான நிகழ்ச்சி நிரல் என்னனு வாங்க பாக்கலாம்.
கோவில் | அழகர்கோவில் |
விழா | ஆடி திருவிழா |
இடம் | மதுரை |
தொடக்க நாள் | 13.07.2024 கொடியேற்றம் |
முடியும் நாள் | 23.07.2024 உற்சவ சாந்தி |
மதுரை அழகர்கோவில் ஆடி திருவிழா 2024
ஆடி பெருந்திருவிழா:
மதுரை அழகர்கோவில் அடிவாரத்தில் உள்ளது தென் திருப்பதி, திருமாலிருசோலை என போற்றப்படும் அழகர் கோவில். இது பெருமாளின் 108 வைஷ்ணவ தளங்களில்ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்து ஆடி பிரமோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவானது அடுத்த மாதம் ஜூலை 13ந் தேதி காலை 7.45 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தங்க பல்லக்கு ஊர்வலம்:
இதற்கு அடுத்து 17 ந் தேதி கள்ளழகர் தங்கப்பல்லக்கில் வலம் வரும் நிகழ்வு நடைபெறும். இது ஜூலை 17 ந் தேதி காலை 6.45 முதல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளி பின்னர் மீண்டும் அழகர் கோவிலுக்கு திரும்புகிறார்.
சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை ! கோவிலின் உள்ளே நுழையும் போது முதல் நாம் வெளியே வரும் வரை
தேரோட்ட விழா:
அடுத்த விழாவாக ஜூலை 20 ல் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி தேரோட்ட விழா ஜூலை 21 ந் தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பதினெட்டாம்படி கருப்பணசாமி படி பூஜை:
இதே போல் அழகர் கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு ஒவ்வொரு வருடம் ஆடி பௌர்ணமி நாளன்று மாலையில் திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜை செய்து தீபாராதனை காண்பித்து மீண்டும் கதவுகளுக்கு சந்தனம் சாத்துப்படியாவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் ஆடி தேரோட்டம் அன்று மாலையில் பதினெட்டாம் படி கருப்பணசாமிக்கு படி பூஜை நிகழ்ச்சி நடைபெறும்.
ஜூலை 23 ந் தேதி உற்சவ சாந்தி நடைபெறுகிறது.அதை தொடர்ந்து ஆகஸ்ட் 4 ந் தேதி அமாவாசையொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம்
ருத்ராட்சம் மாலை பயன்கள் ! ஏக முகம் முதல் 14ம் முகம் வரை
5000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது அப்படியே நடக்கும் அதிசயம்