
Madurai Anganwadi Vacancy 2025: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், மதுரை மாவட்ட திட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 217 அங்கன்வாடி பணியாளர்கள், 04 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 152 அங்கன்வாடி உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் இனசுழற்ச்சி விவரம் அனைத்தும் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்திலும் முறையாக தகவல் தெரிவிக்கப்படும். மேலும் இந்த பதவிகளுக்கான விண்ணப்பத்தினை அதிகாரபூர்வ மதுரை மாவட்ட இணையதளத்தின் வழியாக பெற்றுக்கொள்ளலாம்.
Madurai Anganwadi Vacancy 2025
நிறுவனம் | ICDS-Vacancies in Anganwadi Centres |
வகை | Anganwadi Centres Recruitment 2025 |
காலியிடங்கள் | 373 |
வேலை இடம் | Madurai |
தகுதி | 10th Pass / Fail |
ஆரம்ப தேதி | 09.04.2025 |
இறுதி தேதி | 23.04.2025 |
பதவிகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை:
அங்கன்வாடி பணியாளர்கள் – 217
குறு அங்கன்வாடி பணியாளர்கள் – 04
அங்கன்வாடி உதவியாளர்கள் – 152
Madurai Anganwadi சம்பள விவரம்:
Rs.7700 முதல் Rs.24200 வரை அங்கன்வாடி பணியாளர்கள் பதவிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்படும்
Rs.5700 முதல் Rs.18000 வரை குறு அங்கன்வாடி பணியாளர்கள் காலியிடங்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படும்
Rs.4100 முதல் Rs.12500 வரை அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்படும்
Madurai Anganwadi கல்வி தகுதி:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி 12ம் வகுப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அங்கன்வாடி உதவியாளர்கள் 10ம் வகுப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்
அத்துடன் தமிழ் சரளமாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
Madurai Anganwadi வயது நிர்ணயம்:
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள்,
25 வயதிலிருந்து முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள் / SC & ST பிரிவினர்: 25 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு : 25 வயது முதல் 38 வயது வரை இருக்க வேண்டும்
அங்கன்வாடி உதவியாளர்கள்,
20 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள் / SC & ST பிரிவினர் : 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்
மாற்றுத்திறனாளிகள்: 20 வயது முதல் 43 வயது வரை இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
மதுரை மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் வாரியாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
Also Read: வடக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு 2025! 28 காலியிடங்கள்! நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்!
Madurai Anganwadi விண்ணப்பிக்கும் முறை:
மதுரை மாவட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான பள்ளி மாற்று சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
Madurai Anganwadi முக்கிய தேதிகள்:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 07.04.2025
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 23.04.2025
Madurai Anganwadi தேர்வு செய்யும் முறை:
வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பித்த நபர்கள் நேரடியாக நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
Madurai Anganwadi விண்ணப்பக் கட்டணம்:
எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் பெண்களுக்கு அங்கன்வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Madurai Anganwadi Recruitment 2025 Important Links
Official Notification | Click Here |
Madurai Anganwadi Worker Application Form | Download |
Mini Madurai Anganwadi Worker Application Form | Download |
Madurai Anganwadi Helper Application Form | Download |