Home » செய்திகள் » மதுரை சித்திரை பொருட்காட்சி 2024 : நாளை முதல் தொடங்குகிறது – ஆர்வத்தில் மக்கள்!

மதுரை சித்திரை பொருட்காட்சி 2024 : நாளை முதல் தொடங்குகிறது – ஆர்வத்தில் மக்கள்!

மதுரை சித்திரை பொருட்காட்சி 2024 : நாளை முதல் தொடங்குகிறது - ஆர்வத்தில் மக்கள்!

மதுரை சித்திரை பொருட்காட்சி 2024: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமுக்கம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டுக்கான சித்திரை அரசு பொருட்காட்சி நாளை முதல் ஆரம்பமாகிறது. அதாவது 2024 மதுரை சித்திரை திருவிழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவை காண மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் படையெடுத்து வந்து அழகர் மற்றும் மீனாட்சி அம்மனின் அருளை பெற்று சென்றனர்.

மேலும் 27 அரசுத்துறைகளும், 12 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் அரங்கு அமைத்து, தங்களது துறையின் செயல்பாடு, நலத்திட்ட உதவிகள் குறித்து, பொதுமக்கள் பார்வைக்கு காட்சி படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி தமுக்கம் மைதானத்தில் குழந்தைகளுக்கான கேளிக்கை, விளையாட்டுகள், ராட்டினம்  உள்ளிட்ட பொழுதுபோக்குகள் மற்றும் பல்வேறு கடைகளும் இடம்பெற்றுள்ளனர். எனவே இதை காண மக்கள் படையெடுப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் என்ட்ரி டிக்கெட்டாக சிறுவர்களுக்கு 15 ரூபாயும் பெரியவர்களுக்கு 30 ரூபாய் என்று கூறப்படுகிறது. மதுரை சித்திரை பொருட்காட்சி 2024 – Madurai Chithirai Exhibition 2024 – chithirai thiruvizha 2024

“நான் மீசை வச்ச குழந்தையப்பா” என்ற வரியில் குழந்தையா இது? அடேங்கப்பா சின்னத்திரை நடிகையா கலக்குறாங்களே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top