மதுரை சித்திரை திருவிழா 2024மதுரை சித்திரை திருவிழா 2024

மதுரை சித்திரை திருவிழா 2024. ஏப்ரல் 12 ல் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இந்த ஆண்டு ஏப்ரல் 21 ந் தேதி நடக்கவிருக்கிறது. திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் கீழே முழு விபரங்களுடன் தரப்பட்டுள்ளது.

கோவில்நகரம் மதுரையிலே சித்திரை பெருவிழாவானது உலகளவில் புகழ் பெற்றது. இந்த சித்திரை பெருவிழாவானது கிட்டத்தட்ட ஒரு மாத நிகழ்வாக மதுரை மாநகர மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஒரு மாத நிகழ்வில் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்வானது மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். அச்சமயம் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த அற்புத திருவிழாவை காண வருவர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். ஆனால் அதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அதிலும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம் – ஏப்ரல் 12 – ( காலை 9.55 மணி to 10.19 மணி )

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் – ஏப்ரல் 19

திக்கு விஜயம் – ஏப்ரல் 20

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – ஏப்ரல் 21 – (காலை 8 to 9 மணிக்குள்)

தேர் திருவிழா- ஏப்ரல் 22 மாசி வீதியில் மீனாட்சி சொக்கர்

கள்ளழகர் எதிர் சேவை ஏப்ரல் 22

அழகர் ஆற்றில் இறங்குதல் 23.04.2024

ரம்ஜானுக்கு நோம்பு இருக்கும் இஸ்லாமியர்களே.., உடம்பில் இதெல்லாம் நடக்குமா?.., விளைவுகளை தடுக்க இதை செய்யுங்கள்!

மீனாட்சி கல்யாணத்தை தொடர்ந்து தங்கையின் திருமணத்தை காண வரும் கள்ளழகரின் விழாவும் தொடர்ந்து நடைபெறும்.

அதன்படி வருகிற ஏப்ரல் 22 ந் தேதி மதுரை வரும் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவையும், சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23 ந் தேதியும் நடைபெற இருக்கிறது.

விழா நாட்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் 4 மாசி வீதிகளிலும் வலம் வருவர். எனவே 4 மாசி வீதிகள், அம்மன் சன்னதி தெருவில் போடப்படும் பந்தல்கள், வேப்பிலை தோரணங்கள் போன்றவை சுவாமி வாகனங்களை தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ளவேண்டும் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சுவாமி வீதிகளில் உலா வரும் சமயங்களில் அம்மன் மற்றும் ஸ்வாமிக்கு சாத்துப்படி செலுத்த இறைவனுக்கு உகந்த மலர்களை மட்டுமே சாத்துப்படி செலுத்த வேண்டும். அதைவிடுத்து கேந்திபூ , மருதை வேர்கள் வைத்து கட்டப்பட்ட மாலைகள் சாத்துப்படிக்கு ஏற்கபடமாட்டாது.

Join Whatsapp get Latest Update

திருக்கல்யாணத்தன்று அம்மன் மற்றும் ஸ்வாமிக்கு நிர்வாகத்தின் சார்பில் மட்டுமே பட்டு பரிவட்டங்கள் சாத்தப்படும்.

By Revathy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *