மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாடு அரசின் கீழ் மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் இயங்கி வருகின்றது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் , பணியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023 ! 34 காலிப்பணியிடங்கள் !
அதன் படி காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்க வேண்டிய தேதி , அனுபவம் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
அமைப்பின் பெயர் :
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் இயங்கி வரும் மதுரை மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர் ( UHM / SHM )
2. மருந்தாளுநர் ( Pharmacist )
3. ஆய்வக நுட்புநர் ( Lab Technician )
4. பல்நோக்கு சுகாதார பணியாளர் ( MPHW ) பணியிடங்கள் மதுரை DHSல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர் – 3
2. மருந்தாளுநர் – 9
3. ஆய்வக நுட்புநர் – 14
4. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 8 என மொத்தம் 34 காலிப்பணியிடங்கள் மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர் :
சமூக ஆரோக்கியம் , குழந்தை மருத்துவம் , மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் போன்ற துறைகளில் M.Sc பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த துறைகளில் B.Sc முடித்தவர்கள் எனில் 3 வருட நரசிங் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
2. மருந்தாளுநர் :
பார்மசி துறையில் டிப்ளமோ , இளங்கலை , முதுகலை பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. ஆய்வக நுட்புநர் :
மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப சான்றிதழ் படிப்புடன் ஒரு வருடம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
4. பல்நோக்கு சுகாதார பணியாளர் :
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 ! டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
வயதுத்தகுதி :
1. நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர் – 35
2. மருந்தாளுநர் – 35
3. ஆய்வக நுட்புநர் – 35
4. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 40 வயதிற்குள் இருக்கும் தகுதியான நபர்கள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மதுரை மாவட்ட ஆரம்ப சுகாதார நிலைய வேலைவாய்ப்பு 2023.
சம்பளம் :
1. நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார மேலாளர் – ரூ. 25,000
2. மருந்தாளுநர் – ரூ. 15,000
3. ஆய்வக நுட்புநர் – ரூ. 13,000
4. பல்நோக்கு சுகாதார பணியாளர் – ரூ. 8,500 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
15.11.23ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மதுரை DHSல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தபால் மூலம் தகுதியை நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
செயற்செயலாளர் ,
DHS துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் ,
விஸ்வநாதபுரம் ,
மதுரை – 625 014 ,
தமிழ்நாடு .
விண்ணப்பிக்க தேவையானவை :
1. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம்
2. மதிப்பெண் சான்றிதழ்
3. கல்வி சான்றிதழ்
4. இருப்பிட சான்றிதழ்
5. சிறப்பு தகுதி சான்றிதழ்
6. சாதி சான்றிதழ்
7. ஆதார் கார்டு போன்றவைகளின் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் உடன் சுய கையொப்பம் இட்டு விண்ணப்பபடிவத்துடன் இனைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை :
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் நியமிக்கப்படுவர்.