
குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும். தற்போது படித்து பட்டம் பெற்ற பெரும்பாலானோர் அரசு வேலைக்கு முயற்ச்சி செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவும் குரூப் தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் 9 ஆம் தேதி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு :
Tnpsc குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற பணிகளுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. அந்த வகையில் மதுரையில் தேர்வு நடக்கும் தேதியில் சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் :
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் குரூப் 4 தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !
இந்நிலையில் தேர்வு எழுத வருபவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.