மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம்: தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் தற்போது அமெரிக்கப் பயணத்தில் மேற்கொண்டுள்ளார். இப்பொழுது அவர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் முன்னிலையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.
மதுரையில் ரூ 50 கோடி முதலீட்டில் INFINX ஐடி நிறுவனம்
அதற்கான முதலீட்டு அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் ரொம்ப வருஷமா முதல்வர் முக ஸ்டாலின் அரசு மதுரை மாவட்டத்தை கண்டுகொள்வது இல்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மதுரையில் அடுத்தடுத்து முதலீடுகளையும், உள்கட்டமைப்பு திட்டங்களையும் கொண்டு வருகிறது தமிழக அரசு.
அதன்படி மதுரையில் அமெரிக்க ஐடி நிறுவனம் ஒன்றைக் கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணுவியல் தொழில் வளர்ச்சிக் கழகம் (ELCOT) மதுரை எல்காட் வடபழஞ்சி பகுதியில் அமைந்துள்ளது. tamilnadu cm stalin
Also Read: கோவையில் ரூ 150 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை – முதல்வர் முக ஸ்டாலின் ஒப்பந்தம்!
அங்கு ஏற்கனவே சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட INFINX “இன்ஃபினக்ஸ்” என்ற ஐடி நிறுவனத்தின் அலுவலகம் அமைக்க தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை கேள்வி பட்ட மதுரை மக்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். madurai elcot vadapalanji infinx
மக்களே ஜாக்கிரதை – AC மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்
கேரளாவில் இந்த 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை (29.08.2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
என்னது ஆண் இனம் முடிவுக்கு வருகிறதா?