
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நாளை திடீர் போக்குவரத்து மாற்றம்: மதுரையில் பெரும்பாலான சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் வரும் நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில் சில இடங்களில் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வலியுறுத்தி போக்குவரத்து காவல்துறை முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பணிகள் நடைபெற இருப்பதால், வாகனங்கள் மாற்று பாதையில் செல்வது குறித்து, மதுரை மாநகர காவல்துறை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப்பணிகளுக்காக நாளை (22 -ஆம் தேதி) சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது. அவை பின்வருமாறு,
மதுரை மாவட்டத்தில் நாளை திடீர் போக்குவரத்து மாற்றம் – எந்தெந்த ஏரியாவில் தெரியுமா ? முழு விவரம் உள்ளே!!
காலை(முற்பகல்)
எம்.ஜி.ஆர் (மாட்டுத்தாவணி) பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செய்யும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, வைகை வடகரை ரோடு, செல்லூர் ரவுண்டானா, தத்தனேரி மெயின் ரோடு வழியாக செல்ல வேண்டும். அதே போல அழகர் கோவில் மற்றும் நத்தம் ரோடு வழியாக பெரியார் மற்றும் ஆரப்பாளையம் செல்லும் வாகனங்கள் அவுட் போஸ்ட், மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, சாத்தமங்கலம் ரோடு, பனகல் ரோடு. கோரிப்பாளையம் சந்திப்பு, ஏ.வி பாலம் வழியாக வந்து கீழவெளி வீதி மற்றும் யானைக்கல், வடக்கு மாரட் வீதி வழியாக செல்ல வேண்டும். அதுமட்டுமின்றி பெரியார் பேருந்து நிலையம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் எவ்வித மாற்றமும் இன்றி பழைய வழியில் செல்லலாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்!
மதியம்(பிற்பகல்)
பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் எம்.எம் லாட்ஜ், இ-2 சாலை, அரசன் பேக்கரி, நவநீத கிருஷ்ணன் கோயில் சந்திப்பு, கோகலே ரோடு, IOC ரவுண்டானா வழியாக வந்து நத்தம் சாலை, அழகர்கோவில் வழியாக செல்ல வேண்டும். அதே போல எம்.ஜி.ஆர்(மாட்டுத்தாவணி) பேருந்து நிலையம், அழகர்கோவில் சாலை மற்றும் நத்தம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் தமுக்கம் சந்திப்பில் வலதுபுறம் ( Wrong Right) திரும்பி நார்த் கேட் , தமிழரசி பேக்கரி, கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக ஆல்பர்ட் விக்டர் பாலம் செல்ல வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. tamilnadu traffic police official – madurai traffic news
கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
இந்திய அணியின் HOME போட்டி 2024 அட்டவணை வெளியீடு
கூடுதல் நிவாரண உதவிகளை வழங்க மு.க.ஸ்டாலின் அறிவிப்பு