
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி. இங்கு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதில் நொண்டி, தாயம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளும் அடங்கும். இந்த போட்டிகள் வருகின்ற 16ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு அருங்காட்சியகத்தில் தாயம் விளையாட்டு போட்டி
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தின் சார்பாக உலக அருங்காட்சியக தினம் கொண்டாட படுகிறது. இதன் ஒரு பகுதியாக பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் மதுரை அருங்காட்சியின் சார்பாக நேற்று முதல் போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் நேற்று பல்லாங்குழி போட்டி நடை பெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை தாட்டாங்கள் போட்டி நடை பெறுகிறது. நாளை திங்கட்கிழமை தாயம் போட்டி நடைபெறும். 14ஆம் தேதி நொண்டி விளையாட்டும், 15ஆம் தேதி கிட்டி புல் போட்டி நடைபெறுகிறது. 16ஆம் தேதி கோலிக்குண்டு போட்டி நடத்தப்படுகிறது.
கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !
இந்த போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை 97900 – 33307 என்ற மொபைல் நம்பர்க்கு கால் செய்து முன் பதிவு செய்யவேண்டும்.
இந்த போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டிக்கான விதிமுறை போட்டி நடைபெறும் அன்று தெரிவிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோர் பெரியவர்கள் ரூ.5, சிறியவர்கள் ரூ.3 ம் கட்டணம் செலுத்த வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு நிச்சயம்.