லவ் பண்ணும் பெண்ணை கிஸ் செய்வது பாலியல் வன்கொடுமை ஆகாது: இன்றைய உலகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர். மேலும் காதலிக்கும் போது சிலர் முத்தத்தில் தொடங்கி கல்யாணத்திற்கு மேலான உறவில் இருந்து பின்னர் ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
லவ் பண்ணும் பெண்ணை கிஸ் செய்வது பாலியல் வன்கொடுமை ஆகாது? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இப்படி இருக்கையில் சமீபத்தில் தான் இருவரும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் அந்த காதலி தனது காதலன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் சந்தித்துக் கொண்ட போது எனது காதலன் என்னை கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் இளைஞர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காதலன் மீது காவல்துறை இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, அந்த இளைஞர் காதலி கொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு அளித்தார். எனவே இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மேலும் மனுதாரர் 20 வயதுடையவர்.
இந்தியாவில் பாதுகாப்பான வங்கிகள் 2024 எது தெரியுமா? இதுல உங்க அக்கவுண்ட் இருக்கா!
அவர் காதலித்த பெண்ணுக்கு வயது 19 தான். எனவே, டீன் ஏஜ் பருவத்தினர் லவ் பண்ணும் போது கட்டி அணைத்துக் கொள்வது மற்றும் முத்தமிடுவது ஒரு இயல்பே.
எனவே இதை இந்திய தண்டனை சட்டம் 354 உட்பிரிவின் கீழான குற்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே மனுதாரர் மீதான வழக்குகளை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது” என கூறி உத்தரவிட்டுள்ளார்.
APAAR ID CARD: அபார் மாணவர் அடையாள அட்டை
மாணவர்களுக்காக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை
CISF-ல் முதல் மகளிர் சிறப்புப் படை 2024
9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய்