மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா - காரணம் இது தானா? வெளிவந்த பகீர் பின்னணி!மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா - காரணம் இது தானா? வெளிவந்த பகீர் பின்னணி!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா: கடந்த 2019ம் ஆண்டு எம். கிருஷ்ணன் என்பவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அவருடைய பனிக்காலம் முடியாமல் இருக்கும் நிலையில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக பதவியேற்றார். எனவே அவருக்கு பதிலாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக முன்னாள் பேராசிரியர் ஜெ. குமார் நியமிக்கப்பட்டார். மேலும் அவருக்கு 3 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாக அறிவிக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி அவர் பொறுப்பேற்றதில் இருந்து, பல சர்ச்சைகளில் சிக்கி வந்தார். குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை மறு நிர்ணயம் செய்தல் போன்ற சர்ச்சைகளில் சிக்கி வந்தார் . மேலும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதிலும் சிக்கல்கள் எழுந்து. இதனால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில்  அவருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்ட நிலையில், இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவருடைய பணிக்காலம் நிறைவடைய இன்னும் 11 மாதங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024.., மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தாவிய குருபகவான்? இனி என்னெல்லாம் நடக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *