Home » செய்திகள் » மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ! தூங்கா நகரத்தில் அடுத்த திருவிழா !

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் ! தூங்கா நகரத்தில் அடுத்த திருவிழா !

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம். கோவில் நகரம் மதுரையின் மையத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவிலில் கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. அதனால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்திற்கு மிக அருகில் இந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவின் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது இந்த கோவில். இங்கு கடந்த 2006 ம் வருடம் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதன் பின்னர் 12 வருடங்களுக்கு மேலே ஆகியும் இங்கே கும்பாபிஷேகம் நடத்த படவில்லை. அதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாகவே அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மகா சிவராத்திரி 2024 ! சிவனடியில் சேர சிறந்த நாள் !

கோவிலின் பழமை தன்மை மாறாமலும், புராதனம் மாறாமலும் கோவில் சீரமைக்க படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார். பின்னர் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று 5 மாதங்களுக்கு முன்னதாகவே பணிகள் நிறைவு பெற்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்த பின்னர் குடமுழுக்கு விழா நடத்த திட்டமிட்டனர்.

தற்போது அனைத்து பணிகளும் முடிந்து அனுமதி கிடைத்து விட்டது. அதனால் வருகிற ஜனவரி 21 ல் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த ஆலய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

JOIN WHATSAPP CLICK HERE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top