கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 - இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 - இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

மதுரை மண்ணின் அடையாளமாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக மதுரையில் விளங்கி வருவது தான் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலில் மாதந்தோறும் சிறப்பு பூஜைகள், திருவிழா கொண்டாடப்பட்டு வந்தாலும், சித்திரை திருவிழா மட்டும் மக்களிடையே அதிக சிறப்புகளை பெற்றுள்ளது. இந்த திருவிழாவுக்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 12 முதல் 23ம் தேதி வரை 12 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

அதன்படி இன்று சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. அதாவது மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கம்பத்தடி மண்டபத்தின் அருகே இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கொடி மரத்தில், வெண்பட்டுகள் சுற்றப்பட்டு, தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க , தங்க கொடிமரத்தில் உற்சவ கொடியேற்றம் விமர்சையாக நடைபெற்றது. 

அமித்ஷாவுக்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி – சர்ச்சையை கிளப்பிய பாஜகவினர் வரவேற்பு போஸ்டர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *