மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் - எப்போது நடைபெறுகிறது  தெரியுமா?மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் - எப்போது நடைபெறுகிறது  தெரியுமா?

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம்: மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் கோயில் விளங்கி வருகிறது. இங்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாய் மீனாட்சியை தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அரசியல்வாதி முதல் சினிமா ஸ்டார்கள் வரை இந்த கோவிலுக்கு வந்து அம்மனை அருளை பெற்று செல்கின்றனர். madurai Meenakshi Amman Temple

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம்

மேலும் இந்த கோவிலில் மீனாட்சி அம்மனின் சிலை முழுவதும் மரகதக் கல்லால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மீனாட்சி சிலையின் அழகை காண்பதற்கு கண் கோடி வேண்டும். இந்த கோவிலில் நடத்த படும் சித்திரை திருவிழா உலக பேமஸ் என்று சொல்லலாம். அழகர் ஆற்றில் இறங்கும் நாளன்று வெளியூரில் இருக்கும் பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றுக்கு வந்து விடுவார்கள். madurai meenachi amman

அப்போது மட்டும் இல்லை ஆவணி மூலத் திருவிழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி அடுத்த மாதம் செப்டம்பர் 20 ஆம் தேதி சுந்தரேஸ்வரர் மீனாட்சி மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா ருத்ர அபிஷேகம் நடைபெற இருப்பதாக திருக்கோயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 2024 ஆவணிமாதம்: முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் – உங்கள் வாழ்வில் சுப தினங்களை கண்டுபிடியுங்கள்!

மேலும் அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை 108 கலச பூஜை போன்றவைகள் செய்யப்படும்.

அதுமட்டுமா அன்றைய தினம் மாலை 6.15 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை பார்ப்பதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆன்மீகம் லேட்டஸ்ட் செய்திகள்

சூரிய பெயர்ச்சி ஆடி மாத பலன்கள் 2024

திருப்பதிக்கு போறீங்களா – அப்ப இதுக்கு அனுமதி இல்லை

ஆடி மாதம் இலவச ஆன்மீக சுற்றுலா 2024 !

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *