மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024. சித்திரை திருவிழாவின் மணிமகுடமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் வருகிற ஏப்ரல் 21 ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற ஏப்ரல் 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை இணையத்தளம் வாயிலாக டிக்கெட் பெற்று கொள்ளலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு 2024
திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 19 ல் பட்டாபிஷேகமும், ஏப்ரல் 20 ல் திக்கு விஜயமும் நடைபெறவுள்ளன. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21 ந் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் நடைபெற உள்ளது.
திருக்கல்யாண டிக்கெட்கள் ரூ.500, ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நபருக்கு ரூ.500 க்கான டிக்கெட்கள் 2 மட்டுமே வழங்கப்படும். அதே போல் ரூ.200 க்கான டிக்கெட்கள் 1 நபருக்கு 3 மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரே நபர் இந்த 2 வகையான டிக்கெட்களையும் பெற முடியாது. டிக்கெட் வாங்க ஒரு முறை பயன்படுத்திய எண்ணை மறுபடியும் பயன்படுத்த முடியாது.
டிக்கெட் இணையதளம் வழியாக பெற:
திருக்கல்யாண டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய கோவில் இணைய தளம் maduraimeenakshi.hrce.tn.gov.in வாயிலாகவும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணையதளமான hrce.tn.gov.in வாயிலாகவும் வருகிற 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை இரவு 9 மணிவரை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு 2024 ! சித்திரை மாதத்தின் முதல் நாள் ஏன் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது ?
டிக்கெட் நேரில் பெற:
மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் ரூ.500, ரூ.200 கட்டண ரசீதை நேரில் பெறலாம். ஆதார் நகல், போட்டோ ஐ.டி சான்று, அலைபேசி எண், இ.மெயில், முகவரி அவசியம். நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் களை விட கூடுதல் எண்ணிக்கையில் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.அதன் விவரங்கள் செல்போன், இ.மெயிலில் 14 ந் தேதி தகவல் அனுப்பப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்டோர் வருகிற 15 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஸ்ரம் தங்கும் விடுதியில் பணம் செலுத்தி டிக்கெட்களை பெற்று கொள்ளலாம். டிக்கெட்களை பெற்றவர்கள் 21 ந் தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்குள் வந்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து திருக்கல்யாணத்தை காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.