
விரைவில் மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா. தமிழக மாநகராட்சிகள் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை இணைத்து மதுரை மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா
மதுரை மாநகராட்சி:
மதுரையானது கடந்த 1971 ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போது 52 சதுர கி.மீ உடன் 72 வார்டுகளாக அதன் எல்லை இருந்தது. பின்னர் மக்கள் தொகை பெருக்கத்தினால் அதன் எல்லை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதனால் மதுரை மாநகராட்சியுடன் ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 நகராட்சிகள், ஹார்வி பட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய 3 பேரூராட்சிகள் மற்றும் 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்து கடந்த 2011 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போது அதன் எல்லை 147.99 சதுர கி.மீ ஆகும்.
ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !
மீண்டும் விரிவாக்கம்:
தற்சமயம் மீண்டும் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் பணி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பரவை பேரூராட்சி மற்றும் கருப்பாயூரணி, ஒத்தக்கடை, நரசிங்கம், காதக்கிணறு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், கார்சேரி, செட்டிகுளம், கோவில் பாப்பாக்குடி, ஆலத்தூர், பேச்சிகுளம், விரகனூர் என 9 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியின் எல்லை 195.67 ச.கி.மீ ஆக விரிவாக்கம் செய்து 120 வார்டுகளாக மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இது குறித்த அதிகார பூர்வ தகவல் ஏதும் இதுவரை வரவில்லை என்று மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு
விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு
உதகை தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புகுந்த புலி